நிரந்தர உறுப்பினராக ரூ.8,400 கோடி கட்டணம் அய்.நா அவைக்கு போட்டியாக ‘போர்டு ஆஃப் பீஸ்’ புதிய பன்னாட்டு அமைப்பை தொடங்கிய டிரம்ப்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாசிங்டன், ஜன. 19– இஸ்ரேல் – காசா இடையிலான போர் முடிவுற்ற நிலையில், காசா நகரை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்காக கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அய்க்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளித்தது. இருப்பினும், அய்க்கிய நாடுகள் அவை பயனற்றது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், அதற்கு மாற்றாக ‘போர்டு ஆஃப் பீஸ்’ எனப்படும் ‘அமைதி வாரியம்’ என்ற புதிய பன்னாட்டு அமைப்பை அவர் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த அமைப்பிற்கு அவரே தலைவராகவும் செயல்படுவார் என்றும், பன்னாட்டு மோதல்களுக்குத் தீர்வு காண்பதே இதன் நோக்கம் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தற்போது வெளியான வரைவு அறிக்கையின்படி, இந்த அமைப்பில் சேரும் உறுப்பு நாடுகள் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே உறுப்பினராக நீடிக்க முடியும். ஆனால், ‘தொடக்க ஆண்டிலேயே ஒரு பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8,400 கோடி ரூபாய்) நிதியை ரொக்கமாக வழங்கும் நாடுகளுக்கு இந்த மூன்று ஆண்டுகள் என்ற காலக்கெடு பொருந்தாது என்றும், அவர்கள் அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாகத் திகழ்வார்கள்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் பெரும் பான்மை வாக்கெடுப்பு முடிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் டிரம்பிற்கு இருக்கும். மார்கோ ரூபியோ, ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்காஃப் மற்றும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. கனடா, அர்ஜென்டினா, அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளன.

இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், ‘அடிப்படை உறுப்பினராக சேர கட்டணம் இல்லை. காசா மறுசீரமைப்பிற்கு 50 பில்லியன் டாலர் தேவைப்படுவதால், ஒரு பில்லியன் டாலர் நிதியளிப்பது என்பது நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பு தொகை’ என்றும் தெரிவித்துள்ளனர்.

இது அய்க்கிய நாடுகள் சபைக்குப் போட்டியாக உருவாக்கப் படுவதாக விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘எங்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று குற்றம் சாட்டியுள்ளதுடன், இதற்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *