வல்லம், ஜன.19- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் அவர்களின் 93ஆவது பிறந்த நாளான நிறுவனர் நாள் விழாவை முன்னிட்டு பெரியார் அறிவியல் கழகம் சார்பில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 12.01.2026 அன்று காலை 10.00 மணியளவில் துவங்கியது.
இக்கண்காட்சியை தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினியியல் துறை பேராசிரியை முனைவர் கே.மீனா துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வல்லுநர் குழு நிபுனர்கள் கட்டட எழில்கலைத் துறை பேராசிரியர் ஜீ.திருமால் முருகன், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் ஏ.அசோக் ராஜ் மற்றும் இயந்திரவியல் துறை பேராசிரியர் முனைவர் சி.எம்.விவேக், இக்கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணை முதல்வர் முனைவர் க.ரோஜா மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
புதிய அறிவியல் மற்றும் புத்தாக்க சிந்தனைகளை உருவாக்குவதில் மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களை பொறுப்புடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை அவர்களால் உருவாக்கப்பட்ட திட்ட செயல்முறை படைப்புகள் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். துறை வாரியாக மாணவர்களின் திட்ட செயல்முறை படைப்புகளை பார்வையிட்ட பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) வல்லுநர் குழு (Expert Committee) சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட படைப்புகளை (Project) பரிசுக்காக தேர்ந்தெடுத்தனர். இக்கண்காட்சியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட திட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
துறைவாரியாக முதல் இடம் பெற்ற மாணவர்களின் விவரம்
கட்டட எழில்கலை (Architectural Assistantship(SW) துறையில் ஜே.ஜெனிபர் என்ற மாணவி “Warli Art – Celebration of Life” என்ற திட்ட செயல்முறை படைப்பிற்காக முதல் பரிசினை பெற்றார்.
மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் (ECE) துறையில் எஸ்.அரவிந்த், ஆர். திவ்யா, ஜீ.முகேஷ்குமார், எம்.அபிநயா ஆகியோர் கொண்ட மாணவர் குழு “Embedded Based Pest Detection and Prevention System” என்ற திட்ட செயல்முறை படைப்பிற்காக முதல் பரிசினை பெற்றனர்.
மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ் (MOP) துறையில் ஏ.ரேவதி என்ற மாணவி “Water Pollution” என்ற திட்ட செயல்முறை படைப்பிற்காக முதல் பரிசினை பெற்றனர்.
அமைப்பியல் (Civil) துறையில் ஏ.முபாரக், ஆர்.விபிசா, எம்.மிருதுலா, ஏ.சிறீகாந்த், எம்.முகமத் அனஸ் ஆகியோர் கொண்ட மாணவர் குழு “Smart City Buildings” என்ற திட்ட செயல்முறை படைப்பிற்காக முதல் பரிசினை பெற்றனர்.
கணினியியல் துறை (CT) பி.வெங்கடேஷ், எம்.விஷ்னு சஞ்சய், ஜீ.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட மாணவர் குழு “Intelligent Navigation Robot Using Line Tracking” என்ற திட்ட செயல்முறை படைப்பிற்காக முதல் பரிசினை பெற்றனர்.
மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை (EEE) துறையில் எஸ்.அபிஜித், டி.பாலமுருகன், கே.தர்ஷன் ஆகியோர் கொண்ட மாணவர் குழு “Pollution Mapping And Alert System” என்ற திட்ட செயல்முறை படைப்பிற்காக முதல் பரிசினை பெற்றனர்.
இயந்திரவியல் துறை (Mech) எஸ்.சச்சின், எஸ்.கவுதம் ஆகியோர் கொண்ட மாணவர் குழு “Mini CNC Plotter” என்ற திட்ட செயல்முறை படைப்பிற்காக முதல் பரிசினை பெற்றனர். முதலாம் ஆண்டு (First Year) என். சஞ்சீவ் குமார், சி.ராஜராஜன் ஆகியோர் கொண்ட மாணவர் குழு “Fire Fighting Robot” என்ற திட்ட செயல்முறை படைப்பிற்காக முதல் பரிசினை பெற்றனர்.
இக்கண்காட்சியை இக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் அறிவியல் பூர்வமாக தங்களது (Project) திட்ட செயல்முறை படைப்புகளை உருவாக்கிய அனைத்து மாணவ, மாணவிகளையும் இக்கல்லூரி முதல்வர், துணைமுதல்வர் மற்றும் முதன்மையர் அவர்களும் பாராட்டினார்கள். மேலும் எதிர்காலத்தில் சிறந்த பொறியாளர்களாகவும், பல்துறை வல்லுநர்களாகவும் தங்களை திறம்பட நிலைநாட்டிக் கொள்ள வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இக்கண்காட்சியினை IE(I), ISTE, IIC, பெரியார் அறிவியல் கழகம் பொறுப்பாளர்கள் துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைத் தார்கள்.
