
மலேசியா, ஈப்போ மாநகரில் 18.1.2026 அன்று PSEMI மண்டபத்தில் மா. இலட்சுமணன் தலைமையில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில் மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் மு. கோவிந்தசாமி, சி.மு. விந்தைகுமரன் ஆகியோர் சிறப்புரை நிகழ்தினார்கள். இந்த நிகழ்வில் பெரியார் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார், ஆசிரியர் வாழ்த்து செய்திகள் அடங்கிய மலர்கள் வழங்கப்பட்டன. பொங்கல் வைக்கப்பட்டது, அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
