கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

18.1.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மும்பை மாநகராட்சியை பிடிக்க துவங்கியது பேரம் – சிவசேனா கவுன்சிலர்கள் நட்சத்திர விடுதியில் சிறை வைப்பு. தன் கட்சி கவுன்சிலர் வேறு பக்கம் சாயாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ஷிண்டே தனது கவுன்சிலர்களை பாந்திராவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அதிக காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர் களுக்கு அரசு வேலை: ரூ.2 கோடியில் காளைகளுக்கு உயர்தர சிகிச்சை மய்யம்; அலங்காநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

தி இந்து:

* ரோகித் வெமுலா மறைந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்று தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் நிலை மாறி விட்டதா? எதுவும் மாறவில்லை. இன்னமும் ஜாதிதான் மிகப்பெரிய சேர்க்கை படிவமாக உள்ளது. பாகுபாட்டிற்கு எதிரான சட்டம் பற்றி ராகுல் காந்தி ’எக்ஸ்’ தளத்தில் பதிவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அரசியலமைப்பு, நீதித்துறை, ஜனநாயகத்தை பாதுகாக்க தலைமை நீதிபதிக்கு மம்தா வேண்டுகோள். நாட்டு மக்களை விசாரணை அமைப்புகள் தவறாக குறி வைப்பதில் இருந்து பாதுகாக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவுசெய்து அரசியலமைப்பு, ஜனநாயகம், நீதித்துறை, வரலாறு மற்றும் புவியியல், அத்துடன் நாட்டின் எல்லைகளையும் பேரழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்’ கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஜல்பைகுரி சர்க்யூட் பெஞ்சின் புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்யா காந்த் முன்னிலையில் மம்தா பேச்சு.

தி டெலிகிராப்:

* அமெரிக்கா -பாக் கூட்டுப்பயிற்சி: மோடி அரசு மீது காங். சாடல்: ‘‘தன்னைத்தானே விஸ்வகுருவாக அறிவித்து கொண்டவரின் (பிரதமர் மோடி) தற்பெருமை பேசும் ராஜ தந்திரங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவு; அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு அறிக்கையை வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கண்டனம்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *