15.01.2026 அன்று காலை 10.00 மணிக்கு சோமரசன்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, மாவட்ட கழக காப்பாளர் ஆசிரியர் மு.நற்குணம் தலைமையில் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்(ஆரிய) மாதங்கள், ஆண்டுகள் அதன் தமிழ்ப் பெயர்கள் குறிக்கும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. சா.செபஸ்தியான், சி.திருஞானசம்பந்தம், மாவட்ட செயலாளர் சு.மகாமணி, ச.துரைசாமி, சு.இராஜசேகர், மு.புண்ணியமூர்த்தி, ம.சங்கிலி, பி.தியாகராசன், மொ.பெரியசாமி, சக்தி, சசிகுமார், சுந்தர்ராஜன் மற்றும் தோழர்களும், திரளாக பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
