கருநாடகாவிலும் இரு மொழிக் கொள்கைதான் அமைச்சர் மது பங்காரப்பா தகவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 17- கருநாடகாவிலும் இரு மொழிக் கல்வியைதான் பின்பற்றிவருகிறோம் என்று அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பன்னாட்டு புத்தகக் காட்சி யானது பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை யில் 4ஆவது ஆண்டாக கலைவாணர் அரங்கத்தில் நேற்று (16.1.2026) தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கருநாடக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் ஜெர்மனி பிராங்க்பர்ட் புத்தகக் காட்சி துணைத் தலைவர் (வணிக மேம்பாடு) கிளாடியா கைசர், பிரான்ஸ் துணைத் தூதர் எதியன் ரோலான் பியக், பள்ளிக்கல்வித் துறை செயலார் பி.சந்திரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், கேரள கல்வித்துறை செயலர் வாசுகி, பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் மா.ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மது பங்காரப்பா பேசும்போது, “தமிழ்நாட்டைப் பின்பற்றி கருநாடகாவிலும் பன்னாட்டு புத்தகக் காட்சியை தொடங்க வுள்ளோம்.

கிராமப்புறங்களில் சுமார் 5,000 நூலகங்களை அமைத்துள்ளோம். இதன்மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். தினமும் ஒரு கோடி பள்ளி மாணவர்கள் அரசியலமைப்பு முக வுரையை படிக்கிறார்கள்.

மேலும், இருமொழிக் கல்வியை பின்பற்றி வருகிறோம். தமிழ், மலையாளம், மராத்தி உள்ளிட்ட அதிகம் பேசக்கூடிய மொழிகள் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன” என்றார்.

இந்தப் புத்தகக் காட்சி நாளை (18.1.2026) வரை நடைபெறுகிறது. இதில் 102-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாட்டின் 90 பதிப்பாளர்கள் உள்நாட்டுப் பங்கேற்பில் இடம்பெற உள்ளனர். மேலும் கேரளா, டில்லி, குஜராத், கருநாடகா, மராட்டியம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 42 பதிப்பாளர்கள் பங்கேற் கின்றனர். நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வுள்ளார்.

பின்னர் கருநாடக அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டைப் போல கருநாடகமும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. எங்கள் தாய் மொழியை மதிக்கிறோம். எந்த மாநிலத்திலும் இந்தி திணிப்பை ஏற்க முடியாது. எங்களிடம் மாநிலக் கல்விக் கொள்கை உள்ளதால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது.

கருநாடகத்துக்கும் கல்வி நிதி தர ஒன்றிய அரசு பாகுபாடு காட்டி வருகிறது.

அதற்கும் தமிழ் நாட்டுடன் சேர்ந்து போராடி வருகிறோம். ஒன்றிய கல்வித் துறை அமைச்சருக்கு தெரிந்த ஒரே மொழி மோடியின் மொழி. அதுதான் பிரச்சினை’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *