வரவேற்கத்தக்க சட்டம்! ஆணவக் கொலைக்கு எதிராக கருநாடகாவில் விரைவில் தனிச் சட்டம் 10 ஆண்டு சிறை – ரூபாய் 3 லட்சம் அபராதம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களுரு, ஜன.17 கருநாடகாவில் ஜாதி, மத ரீதியிலான ஆணவக் கொலை களைத் தடுக்கும் நோக்கில் தனிச்சட்டம் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. கருநாடக மாநிலத்தில் அண்மைக்காலமாக ஜாதி, மதம் கடந்து காதல் திருமணம் செய்யும் இணையர் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக கருநாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி. மகாதேவப்பா உள்ளிட்டோர் முதல மைச்சர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவைத் தயாரிக்கும்படி சட்ட அமைச்சகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இதற்கான சட்ட மசோதா கடந்த மாதம் தயாரான நிலையில், அதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டமசோதாவில் 18 வயதான பெண்ணும், 21 வயதான ஆணும் தங்களின் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ள முழு உரிமை இருக்கிறது.

ஜாதி, மதம், மொழி, வர்க்கம், இனம், ஊர் ஆகியவற்றின் பெயரில் பாகுபாடு காட்டி, கவுரவத்தின் பெயரில் திருமணத்தைத் தடுப்பது, தாக்குவது அல்லது கொலை செய்வது குற்றமாகும்.

உயிருடன் இருக்கும் மகளுக்கோ அல்லது மகனுக்கோ இறுதிச்சடங்கு செய்வது, திதி கொடுப்பது போன்ற வற்றை சடங்குகள் செய்வது, மனரீதியாகத் தொல்லை கொடுப்பது, மிரட்டல் விடுப்பது மற்றும் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றவையும் இந்தச் சட்டத்தின்படி குற்றமாகும்.

தண்டனை விவரம்: ஆணவக் கொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

பாதுகாப்பு: காதல் இணையர்கள் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தால், 6 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இந்த மசோதா வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *