சங்கராந்தி அல்ல –
பொங்கல்!
பொங்கல்
திராவிடத்தின்
அடையாளம்!
சங்கராந்தி
ஆரியத்தின்
பிடிவாதம்!
பண்பாட்டுப்
படை யெடுப்பில்
யார் எந்தப் பக்கம்?
பொங்கல்
பொன்னாளில்
முடி வெடுப்போம்!
உழைப்பைக் கேலி
செய்வாரு முண்டோ?
உண்டு உண்டு
ஒரே ஒரு கணம்
மனு தர்மத்தைப்
புரட்டிப் பார்!
பயிர்த் தொழில்
பாவத் தொழிலாம்!
சங்கராச்சாரியார்
சப்பைக் கட்டுகிறார்
உழைப்பின் வாரா
உறுதிகள் உளவோ?
என்னும்
சித்தாந்தத்தின்
சித்திர வரிகள்
பட்டினத்தார் பாட்டு
பார்ப்பனருக்கோ
அதிர் வேட்டு!
சங்கராந்தி அல்ல
தோழா! – அது
திராவிடர் பண்பாட்டின்
சங்கறுக்கும் சூழ்ச்சி!
தமிழா உன்
குழந்தைக்குத்
தமிழில் பெயர்
சூட்டு!
இன்றேல்,
உமக்கு நீயே
சிறைப்படுத்தும்
பூட்டு!
தீபாவளி எனும்
தீயில் வீழாதே!
ஆரிய நெருப்பில்
வேகாதே!
அடிமாடா நீ
ஆரியருக்கு
அடிமைப்பட!
அடிமைப்பட்டது
போதும், போதும்!
அய்யா பெரியார்தம்
கைத்தடி பட்டும்
கண் விழிக்க
காலம் கடத்தாதே!
விழி – எழு!
விடுதலைப் போர்ப்
பாட்டுப் பாடு!
விடியும் உன் வாழ்வு!
பொங்கலோ,
பொங்கல்!
புத்தொளி
பிறக்கட்டும்!
புது விடியல்
பூக்கட்டும்!
வற்றா வூற்றாய்
வாழ்த்துகள்!
வாழ்க பெரியார்!
வளர்க திராவிடம்!
கவிஞர் கலி.பூங்குன்றன்
