7.11.1900 இன்றைய தினம் அண்ணல் அம்பேத்கர் முதல் முதலாக புனெவிற்கு அருகில் உள்ள சிறிய நகரமான சதராவில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கப் பட்டார்.
முதல் நாளே அவருக்கு பள்ளியின் உள்ளே வந்து அமர அனுமதியில்லை. அவரை பள்ளிக்கு அழைத்து வந்தவரிடம் பல்வேறு விதிமுறைகள் கூறப்பட்டன. பின்னாள்களில் அவர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் மோசமான தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டார்.
அவரது நோட்டுப் புத்தகத்தைக் கூட மரத்தில் இருந்து உடைத்துகொண்டுவரப்பட்ட ஒரு குச்சியைக் கொண்டுதான் ஆசிரியர் புரட்டிப் பார்ப்பார்.
இந்த தீண்டாமைக் கொடுமைகள் தான் பிற் காலத்தில் இதுவரை யாருமே படித்திராத பல பட்டங் களைப் பெறவும். இந்திய அரசமைப்புச்சட்டத்தை இயற்றவும் காரணமாக இருந்தது.