பொங்கல் – திருநாள் – தை – புத்தாண்டு முதல் நாள்!
உழவர்தம் உவகை விழா – உழைப்பின்மூலம்!
ஆண்டாண்டு கால ‘‘அடிமைகளாக’’
குனிந்து வளைந்து கிடந்தனர் மக்கள் – குலதர்மத்தால்!
அதனை எதிர்த்து மாற்றியது
திராவிட மாடல் ஆட்சி – நாளும் – சமதர்மத்தால், சுயமரியாதையால்!
அவ்வாட்சியின் நீட்சியில்தான்
நமது மக்களின் மீட்சி உள்ளது என்பதால்,
விடியல்கள் விரிவடையட்டும் –
வெளிச்சங்கள் எங்கும் பாயட்டும்!
அனைவருக்கும் இனிய பொங்கல் – புத்தாண்டு வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.1.2026
