தஞ்சாவூர், ஜன.13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை மாணவர்கள், கும்பகோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 08.01.2026 அன்று நடைபெற்ற “MECH STORM – 2K26” (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கட்டுரை வாசித்தல் (Paper Presentation) என்ற போட்டியில் “Integration of AI & IoTs in Predictive Maintenance of Mechanical Systems” என்ற தலைப்பில் மூன்றாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர் செல்வன் எஸ்.டி.ஹரிஹரன், முதல் பரிசையும் மற்றும் CAD Modeling என்ற போட்டியில் மூன்றாவது பரிசையும் பெற்றுள்ளார்.
பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் ரொக்கப்பரிசுகளும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த எஸ்.டி.ஹரிஹரன் என்ற மாணவரையும் மற்றும் கலந்து கொண்ட மற்ற மாணவர்களையும் இக்கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் ஜி.இராஜாராமன் மற்றும் துறைத்தலைவர்கள் பாராட்டி னார்கள்.
