கண்ணந்தங்குடி கீழையூர் (கீழத்தெரு)சின்னி காளிங்கராயர் தெருவை சேர்ந்த வெ.விஸ்வநாதன் அவர்களுடைய தந்தை, ஞானம்மாள் அவர்களின் இணையர் மணியன் (என்கிற) வெங்கடாசலம் உடல்நலக் குறைவால் 12-01-2026 மதியம் மறைவுற்றார். கண்ணந்தங்குடி கீழையூரில் செயல்பட்டு வருகிற பெரியார் படிப்பகம் – கி.வீரமணி நூலகத்தை பல ஆண்டுகளாக பராமரித்து வந்தவர் வெங்கடாசலம் ஆவார். அவருக்கு கழகப் பொறுபபாளர்கள், தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் ஆசிரியர் நேரிலேயே இரங்கல் தெரிவித்தார்.
