திருப்பதி சென்று சாமி கும்பிட்டு தொடங்கி வைத்தார்களே என்னாயிற்று? பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் தோல்வி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பசிபிக் கடலில் விழுந்த செயற்கைகோள்கள்

சிறீஅரிகோட்டா, ஜன.13 இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி 62 நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே தனது பாதையில் இருந்து விலகிச் சென்றதால் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளை மட்டுமின்றி, நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மய்ய முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 10.18 மணிக்கு 18 செயற்கைக் கோளுடன் புறப்பட்ட பிஎஸ்எல்வி சி62 ராக்கெட், 8-ஆவது நிமிடத்தில் தனது பாதையில் இருந்து விலகிக் சென்றது.

பாதை விலகிய ராக்கெட்

இந்த ராக்கெட்டில் பிரதானமாக இஓஎஸ்-என் 1 (அன்விஷா) செயற்கைக்கோள் இருந்தது. மேலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சொந்தமான 17 சிறிய செயற்கைக்கோள்களும் இணைக்கப்பட்டிருந்தது.

பிரதான செயற்கைக்கோளான இஓஎஸ்-என்1 தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், புறப்பட்ட 8-ஆவது நிமிடத்தில் ராக்கெட்டின் 3-வது நிலையில் (பி.எஸ்.3) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உந்து விசை குறைந்ததால், குறிப்பிட்ட பாதையில் இருந்து ராக்கெட் விலகிச் சென்றது.

8 மாதங்களில் 2-ஆவது தோல்வி

ராக்கெட்டில் இருந்த 18 செயற்கைக்கோள்களும் புவி ஈர்ப்பு பகுதிக்குள்ளேயே அப்போது இருந்த தால், அனைத்தும் பசிப்பிக் பெருங்கடலில் விழுந்து விட்டது. திட்டமும் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.

ஏற்ெகனவே, கடந்த ஆண்டு ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி61 ராக்கெட்டும் இதே பிரச்சினையால் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 8 மாதங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 2-ஆவது தோல்வி இதுவாகும். இது பிஎஸ்எல்வி ராக்கெட்டின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை ஏற்படுத்தி இருப்பதால் விண்வெளி பயணத் திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

ஒவ்வொரு முறையும் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும்போதும், அந்தத் திட்டத்தை திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் வைத்துக் கும்பிட்டுத்தான் அனுப்புகிறார்கள் இருந்தும் பயன் என்ன கிடைத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *