நாகர்கோவில், ஜன.13 அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று (12.1.2026) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹிந்தி திணிப்பு
அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதை மறந்துவிட்டு, மதுரையில் அண்ணா பெயரில் உள்ள பூங்கா பெயரை மாற்றவுள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தி.மு.க.வுக்கு 5 முழக்கம் இருக் கிறது. அதில் ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்ற முழக்கமும் ஒன்று.
அண்ணா எதை கற்றுத்தந் தாரோ, எதை முன் வைத்தாரோ, அதை இத்தனை ஆண்டுகளாக தி.மு.க. முன்வைத்து வருகிறது. ‘ஆதிக்கமற்ற சமுதாயம் படைத்தே தீருவோம்’ என்பது அண்ணாவின் 2-ஆவது முழக்கம். அதனால் தான் ஒரு ஆதிக்க சமூகத்தை கட்டமைக்க நினைக்கின்ற பாசிச சிந்தனை கொண்ட பா.ஜ.க.வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
அதே போன்று ‘ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்று சொன்னோம். இன்றைக் கும் நம்முடைய கொள்கையில் கடுகளவு கூட விட்டுக் கொடுக் காமல் ஹிந்தி திணிப்பை எதிர்க்கிறோம். அதே போன்று ‘வன்முறை தவிர்த்து வறுமை ஒழிப்போம்’ என்று சொன்னோம். இன்றைக்கு எத்தனையோ வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட் டுள்ளன.
தமிழ்நாட்டை பார்த்து மற்ற மாநிலங்கள் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் கொண்டு வருகிற அளவுக்கு அந்த முழக்கத்தை நிறைவேற்றி உள்ளோம்.
அதேபோன்று ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற தத்துவத்திலும் உறுதியாக இந்த இயக்கம் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது அந்த தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக செயல்படும், மாநில சுயாட்சிகளை, மாநில உரிமைகளை, மாநிலத்திற்கான நிதி ஆதாரங்களை தராமல் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட் டணியில் சேர்ந்து அவர்களின் இசைக்கெல்லாம் ஆடுகின்ற ஒரு கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. சொந்தக் கட்சியில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை, பஞ்சாயத்தை தீர்ப்பதற்கு டில்லியில் போய் அமித்ஷாவிடம் முழங்காலிடு கிறார்கள். இந்த கூத்தையெல்லாம் செய்பவர்கள் ஹிந்தியை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை.
தி.மு.க. என்றைக்கும் தன்னு டைய முதல் முழக்கமான ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்ற தத்துவத்தி லிருந்து கடுகளவும் வழிதவறாது. 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வர உள்ளார். அவரது வருகையால் தமிழ்நாடு அரசியலில் கண்டிப்பாக மாற்றம் இருக்காது. அவர் இந்த முறையும் 100 சதவீதம் வெறுங்கையோடு தான் வரப்போகிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்குத் தர வேண்டிய நிதியை அவர் தரப்போவதில்லை. அதை அவர் முடிவோடு வைத்திருக்கிறார். கேரளாவில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை நடத்த அங்குள்ள அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களையோ, நமக்கு சேர வேண்டிய நிதி யையோ அவர் கொண்டு வரப் போவதில்லை.
வெறும் வார்த்தை ஜாலங் களோடு வரப்போகிறார். எப்படி யாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்க முடியுமா என்று சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்றார் அவர்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது ‘பராசக்தி’ படத்தின் விமர்சனம் எப்படி இருக்கிறது? என்று கேட்டபோது, நான் சினிமா பார்க்கவில்லை என கூறினார்.
