புதுடில்லி, ஏப். 24- பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம், நாடாளு மன்ற உறுப்பினர் ராகுல் காந் திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி பதவியை இழந்தார்.
இதையடுத்து, டில்லியில் வசித்து வந்த அரசு இல்லத்தை ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு மக்களவை செயலகம் அவருக்கு தாக்கீது அனுப்பியது. இந்நிலையில், டில்லியில் 19 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு இல்லத்தை ராகுல் காந்தி 22.4.2023 அன்று காலி செய்து சாவியை அதிகாரிகளிடம் ஒப் படைத்தார். அப்போது, தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, ராகுல் காந்தி தனது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வார் என்று பிரியங்கா காந்தி கூறினார். அந்த இல்லத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, புறப்படும் முன்பு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தன்னிடம் இருந்து இல்லத்தை பறித்தது எந்த பிரச்சினையும் இல்லை என்றும், உண்மையைப் பேசுவ தற்காக எத்தகைய விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.