கேள்வி: ‘தமிழகம், புதுச்சேரியில் ஒருபோதும் ஹிந்திக்கு இடமில்லை’ என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளாரே?
பதில்: அன்று நான்கு மாநிலங்களில் பரந்து விரிந்திருந்த திராவிட நாடு, இன்று சுருங்கி, தமிழகம், புதுச்சேரியில் ஹிந்தி எதிர்ப்பாக நீர்த்துப் போயிருக்கிறது. அதைத்தான் பெருமையாகக் கொண்டாடுகிறார் கி.வீரமணி.
-‘துக்ளக்’, 26.4.2023, பக்கம் 9
ஒரு காலகட்டத்தில் இந்தியா முழுமையுமே திராவிடர்கள் பரவி இருந்தனர். சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று
திரு.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்களின் ஆய்வு நூலும் வந்துவிட்டது. அவற்றை எல்லாம் விட்டுவிட்டாரே குருமூர்த்தி, சேர்த்துக் கொள்ளவேண்டியதுதானே!
‘தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரு போதும் ஹிந்திக்கு இடமில்லை’ என்று தி.க. தலைவர் சொன்னதற்கு என்ன பதில்? பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலைஎன்று உளறுவதுதான் பார்ப்பனர் களின் லாஜிக்!