சென்னை, ஜன. 10 கடந்த சில நாள்களாக ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என காங்., நிர்வாகிகள் சிலர் பேசியது திமுக-காங்., கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் எவரும் பேச வேண்டாம் என கு.செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். ‘இண்டியா’ கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றால், அது, அதிமுக-பாஜக கூட்டணிக்கு தான் பலன் எனவும், அதனை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
