சென்னை, ஜன.10 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி 18-ஆம் தேதி டில்லியில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காணுதல், மாவட்டத் தலைவர்கள் நியமனம் மற்றும் தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள்.
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட உள்ள கிராம குழு மாநாடுகள் குறித்த ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது
ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாட்டைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கட்சியில் தேசிய பொறுப்பில் உள்ளவர்களும் செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்) ராஜேஷ்குமார் (சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்) ப.சிதம்பரம் (முன்னாள் ஒன்றிய அமைச்சர்) கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி (முன்னாள் மாநிலத் தலைவர்கள்) ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியலில் ‘அதிகாரப் பகிர்வு’ குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், டில்லியில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
