மின் தடை எப்போது? உடனே தெரிந்தகொள்ள ஏஅய் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL), பொதுமக்கள் தங்கள் பகுதியில் திட்டமிடப்பட்ட மின் தடை விவரங்களை எளிதாக அறிந்து கொள்ள புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.
முன்கூட்டியே அறிதல்
உங்கள் பகுதியில் எப்போது மின் தடை செய்யப்படும் என்பதை TNPDCL இணையதளத்தின் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதற்கேற்ப உங்கள் பணிகளைத் திட்டமிடலாம்.
இணையதள முகவரி: திட்டமிடப்பட்ட மின் தடை விவரங்களைச் சரிபார்க்க https://www.tnebnet.org/outages/viewshutdown.xhtml என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.
எப்படிச் சரிபார்ப்பது?:
இணையதளத்திற்குச் சென்று, உங்கள் மாவட்டம் அல்லது வட்டத்தைத் (Circle/Region) தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்தப் பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள மின் பராமரிப்புப் பணிகள் மற்றும் மின் தடை விவரங்களைப் பெறலாம்.
