பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கவிஞர் கலி.பூங்குன்றன்

கொண்டாட்டம் தேவைதான்

கொள்கைவழிப் பாதையிலே!

மூடத்தனத்தை மோப்பம்

பிடிக்கவா பண்டிகைகள்!

பூமியைப் பாயாக

சுருட்டினான் என்ற

புராணக் கழிவுகளை

புசிப் பதற்கும்

பன்றிக்கும் பூமிக்கும்

பிறந்தது பிள்ளை என்ற

ஆபாசப் புழுதிகளை

அள்ளி முடிவதற்கும்

பண்டிகை என்று

பெயர் சூட்டி மகிழ்ந்தால்

பறிப் போவதோ பகுத்தறிவுதான்?

வாழ்வின் புற அம்சங்கள்

வளமாகச் சிரித்தாலும்

சீழ்பிடித்தது சிந்தனை யென்றால்

சிரிக்கத்தான் முடியுமா வாயால்?

இந்த வகையில்

சீர்தூக்கிப் பார்த்தால்

தப்பிப் பிழைப்பது

தை முதல் நாளாம்

பொங்கலன்றோ!

அதிலும் கை வைத்தது

ஆரியம்!

சங்கராந்தி என்று சொல்லி

சாஸ்திரப் புழுக்களை

நெளிய விட்டது

சங்கரக் கும்பல்!

எதிலும் விழிப்பு வேண்டும்

எம் திராவிட மக்களுக்கு!

பண்பாட்டுப் படையெடுப்பு

பாம்பின் நஞ்சினும் கொடிது!

உலகில் அறுவடை நாள்

உண்டு – கொண்டாட்டம்தான்!

நாவினிக்கப் பொங்கி வருவது

நவில்வோம் – அது பொங்கலே!

உழவுக்கு மாடுகள்

எனவே மாட்டுப் பொங்கல்!

கண்டு அளவளாவ

கை  குலுக்கி மகிழ

காணும் பொங்கல்

களிப்பை ஊட்டும்!

பொங்கல் புதுப்புனலில்

நீந்தி மகிழ்வோம்!

தமிழ் மண்ணெல்லாம்

பொங்கலோ பொங்கலென்று

புதுவெள்ளம்

புரட்சி வெடித்து

ஆரியப் படையெடுப்பை

ஆணி வேரோடு வீழ்த்துவோம்!

பொங்கலோ பொங்கல்

பொங்கட்டும்

புரட்சிப் பொங்கல்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *