ேகாவில்பட்டி, ஜன.9 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அதிமுக மேனாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும்போது கூறியதாவது:
இலவச மிதிவண்டி மற்றும் கட்டணமில்லா பயண அட்டை, புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் மற்றும் புத்தகப்பை. வரைபடம், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற கல்வி உபகரணங்கள். காலணி முதல் மடிக்கணினி வரை அனைத்தும் இந்த அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன.
“இந்தக் காலத்து மாண வர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இந்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, மாணவ-மாணவிகள் சமு தாயத்தில் சிறந்த நிலைக்கு உயர வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
மடிக்கணினி திட்டம்: தமிழ்நாட்டின் பெருமை மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய கடம்பூர் ராஜு, “உலகத்திலேயே படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டைப் பார்த்துதான் இந்தியாவின் பிற மாநிலங் களும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங் கின. இடையில் நிறுத்தப்பட் டிருந்த இந்தத் திட்டம் தற்போது மீண்டும் தொடங் கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
திமுக அரசின் தற்போ தைய முடிவை வரவேற்ற அவர், “சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் வந்திருக்கிறதே, அது பாராட்டத்தக்கது,” என்று தெரிவித்தார்.
