தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.04.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 93 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 1,16,800 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரை அமைப்புடன் கூடிய 84 நவீன நெல் சேமிப்பு தளங்களையும், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் 750 மெட்ரிக் டன் கொள்ளளவில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கினையும் திறந்து வைத்தார். மேலும், 39 கோடியே 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10 மாவட்டங்களில் கட்டப்படவுள்ள 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்அர.சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்ஜெ.ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர்வே.ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் சு.பிரபாகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.