போபாலில் கிரிக்கெட் அணிக் குத் தேவையான திறமையான நபர் களை உருவாக்க கிரிகெட் கிளப் ஒன்றை மத்தியப் பிரதேசம் போபாலில் துவங்கி உள்ளனர்.
இந்த அணியில் பங்கு பெற ஒரே தகுதி மட்டுமே தேவை அதாவது அவர் தூய பார்ப்பனர் வம்சமாக இருக்கவேண்டும்!
பூணூல், தார்பாய்ச்சிய பட்டுக்கரை வேட்டி பஞ்சகச்சம், மஞ்சள்காவி மேல்சட்டம், நெற்றி நிறைய சந்தனப் பட்டையோடு துளசிமாலை தான் அவர்களது சீருடை!
இதில் சிறந்து விளங்கும் வீரர்களை இந்திய அணிக்கு விளையாட வைப்பதாக இதனை நடத்தும் அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவர் கிரிதர் வைத்யா கூறினார்.
கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரன் கொண்டுவந்த விளையாட்டு. இதனை தென் அமெரிக்க நாடுகள் அடிமைகளின் விளையாட்டு என்று கூறி விளையாட மறுத்துவருகிறது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு இன்றளவும் பெரும்பான்மை புள்ளிகள் கிடைக்காததால் சேர்க்கமுடியவில்லை.
இப்படிப்பட்ட அடிமைவிளையாட்டை இவர்கள் விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறார்களாம்?
