போல்ப்பூர், ஜன.8 மேற்கு வங்கத்தில் நடைபெறும் எஸ்அய்ஆர் தொடர்பாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு (92) தேர்தல் ஆணையம் கடந்த 7.1.2026 அன்று தாக்கீது அனுப்பியது. அமர்த்தியா சென் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் சாந்திநிகேதன், போல்ப்பூரில் உள்ள அவரது மூதாதையர் இல்லத்தில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் தாக்கீது வழங்கப்பட்டது. இதில் ஜனவரி 16-ஆம் தேதி அவர் தனது இல்லத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு .தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்புப் படிவத்தில் அமர்த்தியா சென் மற்றும் அவரது தாயாருக்கு இடையிலான வயது வித்தியாசம் 15 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்துள்ளது. இந்த முரண்பாடு காரணமாக இந்த தாக்கீது அனுப்பப்பட்டதாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினர்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஷமி, அவரது சகோதரர் முகமது கைஃப் ஆகியோருக்கும் தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
அமர்த்தியா சென் போன்ற பிரபலங் களுக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியதற்கு திரிணமூல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது “வங்காள மக்களை அவமதிப்பதற்குச் சமம்” என்று திரிணமூல் காங்கிரஸ் நாாடளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார். மேலும் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
