வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் 6.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.8 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு, 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்அய்ஆர்) நடைபெற்றன. அதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் தலைமை தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து சதி செய்கிறது. வாக்கு திருட்டில் பாஜக ஈடுபடுகிறது என்று சரமாரியாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும், செய்தியாளர்களைச் சந்தித்து, முந்தைய தேர்தல்களில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக கூறி ஆவணங்களை வெளியிட்டார்.

அவற்றை எல்லாம் தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. அத்துடன், வாக்கு திருட்டு தொடர்பாக கூறப்படும் குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரங்களை சமர்ப் பிக்க வேண்டும். இல்லாவிடில் சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியது. ஆனால் ராகுல் காந்தி எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில், 2-ஆம் கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கியது.

தமிழ்நாடு, கேரளா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் எஸ்அய்ஆர் பணிகள் தொடங்கின. பீகாரை போலவே 2003-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திருத்தப் பணிகளின் போது வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோத மாக குடியேறியவர்களை நீக்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டது.

44.40 கோடி வாக்காளர்கள்

இந்த 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்அய்ஆர் தொடங்குவதற்கு முன்பு மொத்தம் 50.90 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்நிலையில் தனித்தனி வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பிறகு இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை 44.40 கோடியாக குறைந்துள்ளது.

வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் ‘ASD’ (absent, shifted and dead/duplicate) அதாவது வராதவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இறந்தவர்கள் / இரட்டை பதிவுகள் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ்அய்ஆர் பணி மேற்கொள்ளப் பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் கணக்கெடுப்பு படிவங்கள் மிகவும் குறைவாகவே திரும்பப் பெறப்பட் டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர்.

உ.பி.யில் மொத்தம் 15.44 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இம்மாநிலத்தில் எஸ்அய்ஆர் பணிக்கு பிறகு கடந்த 6.1.2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 12.55 கோடி வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2.89 கோடி வாக்காளர்கள், அதாவது 18.70 சதவீதம் பேர், இறப்பு, நிரந்தர இடப்பெயர்வு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவு காரணமாக நீக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

தமிழ்நாட்டில் எஸ்அய்ஆர் பணி நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரியில் இல்லாதவர்கள் என 66.44 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அசாமில் தனியாக எஸ்அய்ஆர் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *