சென்னை, ஜன. 8- புத்தகக் காட்சியின்போது வாசகர்கள் மத்தியில் தினமும் எழுத்தாளர்களும், பல்துறை அறிஞர்களும் உரையாற்றுகின்றனர். மேலும், பாரம்பரிய இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சிகளும், ரத்த தான முகாமும் நடைபெறுகின்றன.
முக்கிய நிகழ்வுகளின் அட்டவணை
ஜனவரி 9: ஓவியப் போட்டி.
ஜனவரி 10: பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி.
ஜனவரி 12: 3,000 பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி.
ஜனவரி 13: கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, பொங்கல் விழா மற்றும் மாஸ்டர் பவர் பாண்டியன் குழுவினரின் சிலம்ப நிகழ்ச்சி.
ஜனவரி 18: மாணவர்களுக்கான கதை எழுதுதல், கதை சொல்லுதல் மற்றும் தமிழ் வார்த்தை அமைத்தல் போன்ற போட்டிகள்.
ஜனவரி 21 (நிறைவு நாள்): பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் விருதுகளை வழங்கி உரையாற்றுகிறார்.
தினமும் காலை 11 மணிக்கு தொடங்கும் புத்தகக் காட்சி இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
சலுகை: புத்தகக் காட்சியில் வாங்கப்படும் அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதக் கழிவு வழங்கப்படும்.
அனுமதி: வாசகர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.
