திருச்சி, ஜன.8- திருச்சி திராவிடர் கழகத்தின் மேனாள் மாநகர தலைவரும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான சி.மருதை (வயது 83) உடல் நலக் குறைவு காரணமாக டிச.23 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
அவரது உடல் அவரின் விருப்பத்தின் பேரில் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப் பட்டது.
மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சி.மருதை படத்திறப்பு நிகழ்ச்சி ஜன.4 ஆம் தேதி திருச்சி சுப்ரமணியபுரம், அய்வேஸ் காலனியில் உள்ள அவரது இல்லத் தில் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சி.மருதை படத்தினை திறந்து வைத்தார். தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மாநில மகளிர் பாசறை துணை செயலாளர் அம்பிகா, ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் முகுந்தன் (திமுக) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதிய சங்க திருச்சி மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி ஓய்வூதிய சங்க மண்டல செயலாளர் தாமஸ் நினைவேந்தல் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஒய்வூதிய சங்க தலைமை நிலைய செயலாளர் மருதாசலம், மாநில நிர்வாகி சுந்தரி, மருதை சகோதரி பார்வதி மற்றும் திமுக மாநகர செயலாளர் மதிவாணன், செங்குட்டுவன், திரா விடர் கழக மாவட்ட செயலாளர் மகாமணி, மாவட்ட ப.க. தலைவர் மதிவாணன், பொதுக்குழு உறுப்பினர் சங்கிலிமுத்து, பெல் மா.ஆறுமுகம், மா.செந்தமிழினியன், கல்பாக்கம் ராமச்சந்திரன், ப.க. பென்னி, ஜெயராஜ், விடுதலை செல்வம், மாநகரத் தலைவர் ராமதாஸ், வெல்லமண்டி ராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ரூபியா, காட்டூர் காமராஜ், ராஜசேகர் உள்ளிட்ட கழக தோழர்கள் நிர்வாகிகள் மறைந்த சி.மருதையின் வாழ்விணையர் சுசிலா, மருமகள் மோனிஷா, மகள் சுமதி, மருமகன் ராஜேஷ், மற்றும் உறவினர்கள் உட னிருந்தனர். நிறைவாக மருதை மகன் அன்பழகன் நன்றி கூறினார்.
