பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா காப்பீடு (இன்சூரன்ஸ்) நிறுவனத்தில் (UIIC) (அப்ரண்டிஸ்) பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 153 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 19 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.01.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 153
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் 2021, 2022, 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் ஏதேனும் ஓர் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.12.2025 அன்று 21 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒன்றிய அரசு விதிகளின்படி எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
ஊக்கத்தொகை: ரூ. 9,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங் களுக்கு இளங்கலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2026
