சந்தேகமோ? ஏழுமலையான் உண்டியல் காணிக்கையை மேஜை மீது ஏன் எண்ணக் கூடாது? ஆந்திர உயர்நீதிமன்றம் கேள்வி

1 Min Read

அமராவதி, ஜன.7 ​திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு அன்றாடம் பக்​தர்​கள் சராசரி​யாக ரூ.4 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தி வரு​கின்​றனர். உண்​டியல் ஆதாயம் ஆண்​டுக்கு சுமார் ரூ.1,500 கோடி​யாக உள்​ளது.

இந்​நிலை​யில், பல ஆண்​டு​களாக திருப்​பதி தேவஸ்​தான சீனியர் உதவி​யாள​ராக பணி​யாற்றி வந்த ரவிக்குமார் எனும் ஊழியர், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி நாட்டு கரன்​சிகளை திருடிய​தாக கைது செய்​யப்​பட்​டார். இவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், இது​போல் சுமார் ரூ.100 கோடி வரை திருடி, சொத்​து சேர்த்தது தெரிய​வந்​தது.

இது தொடர்பான வழக்கை தற்​போது சிபிஅய் அதிகாரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். இவ்​வழக்கு தொடர்​பாக, நேற்று (6.1.2026) ஆந்​திர உயர் நீதிமன்​றத்​தில் விசாரணை நடை​பெற்​றது.

அப்​போது, ஏழு​மலை​யானின் காணிக்கை பணத்தை ஏன் தரையில் உட்​கார்ந்தே எண்ண வேண்டும்? மேஜை, நாற்​காலி ஏற்​பாடு​களை ஏன் திருப்​பதி தேவஸ்​தானம் செய்யக் கூடாது?

மேலும், வேட்​டிகளை மட்​டுமே ஏன் உடுத்த வேண்​டும்? இதற்​கென சிறப்பு சீருடையை திருப்​பதி தேவஸ்தானம் ஏற்​பாடு செய்​ய​லாம் அல்​ல​வா? என்ற கேள்வி​களை உயர் நீதிமன்​றம் எழுப்​பியது. இதற்கு நிர்வாக அதி​காரி​யிடம் கேட்​டறிந்து பதில் அளிப்ப​தாக தேவஸ்தான தரப்பு வழக்​குரைஞர் கூறி​னார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *