மதுரை, ஜன.7 ‘கந்துவட்டி, மணல் கொள்ளை, பொருளாதார மோசடி, பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடு மைகளைத் தடுக்கக் கூடுதல் கவனம் செலுத்தப்படும். போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்’ என, மதுரையில் தென்மண்டல அய்.ஜி. யாகப் பொறுப்பேற்ற விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்
மேலும் அவர் கூறியதாவது:
தென்மாவட்டங்களுக்குச் சென்று, காவல்துறை துணைத் தலை வர்கள், மாவட்டக் காவல்துறை கண்கா ணிப்பாளர்களுடன், சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பது, குற்றங்களைக் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன். போதைப்பொருள் விற்பனை, மணல் கொள்ளையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். கந்து வட்டி உள்ளிட்ட புகார்களை விசா ரிக்க சிறப்பு முகாம் நடத்தப்படும். முந்தைய காவல்துறை தலைவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக குற்ற வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரப்படும்
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அவர்கள் மீதான வன்கொடுமையைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். சைபர்கிரைம், பொரு ளாதார மோசடி போன்ற புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற அடிப்படையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் . அதிக குற்ற வழக்குகள் பதிவாகும் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் குற்றங்களைக் குறைத்து முன்மாதிரி காவல் நிலையமாக மாற்றப்படும். சட்டத்தை மீறி செயல்படும் காவல்துறை யினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
