புதுடில்லி, ஜன. 7- 2020 டில்லி வன்முறை சதி வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்க மறுத்தது.
இதனைத்தொடர்ந்து டில்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளா கத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இது தொடர்பான காணொலி வெளியானது. முழக்கம் எழுப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டில்லி மாநில அமைச் சர் கபில் மிஸ்ரா கடு மையான கண்டனம் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக டில்லி மாநில சட்டத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறுகையில் “பாம்புகள் நசுக்கப்படுகின்றன. பாம்புக் குட்டிகள் அலறுகின்றன. கிரிமினல்கள், நக்ச லைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியவர்கள், தற்போது விரக்தியடைந்துள்ளனர்.
ஏனென்றால், அவர்களுடைய திட்டம் ஒன்றன்பின் ஒன்றாக தகர்க்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கிரிமினல்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
