2.89 கோடி வாக்காளர்கள் மொத்தமாக நீக்கம்! எஸ்.அய்.ஆர். பணிகளுக்கு பின் தலைகீழாக மாறிய உ.பி. வாக்காளர் பட்டியல்

2 Min Read

லக்னோ, ஜன. 7- எஸ்அய்ஆர் பணிகளுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் இப்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்த வாக்காளர்களில் 18.70% பேர், அதாவது 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் எண்ணிக்கை 12.55 கோடியாகக் குறைகிறது.

பீகாரில் கடந்த மாதம் தேர்தல் நடந்த நிலையில், அதற்கு முன்பு அங்கு எஸ்அய்ஆர் பணிகள் நடத்தப்பட்டன. அதேபோல மற்ற தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் எஸ்அய்ஆர் பணிகளை மேற் கொள்ளத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, உத்தர பிரதேசம் மாநிலங்களில் எஸ்அய்ஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்கனவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்அய்ஆர் பணிகளுக்குப் பிறகு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இப்போது உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது மொத்த வாக்காளர் பட்டியலில் 18.70% பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக 46 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டதாகச் சொல்லி நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 15.44 கோடியாக இருந்த உத்தரப் பிரதேச வாக்காளர்களின் எண் ணிக்கை, 12.55 கோடியாகக் குறைகிறது.

தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்அய்ஆர் பணிகளுக்கு முன்பு லக்னோவில் 39.9 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது அது 27.9 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது 30 சதவிகித வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதேபோல், லலித்பூரில் வாக்காளர் எண்ணிக்கை 9.5 லட்சத்தில் இருந்து 8.6 லட்சமாகக் குறைந்து. அதாவது 10 சதவிகித சரிவைக் கண்டது.

மொத்தம் 2.89 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதில், 2.17 கோடி பேர் வேறு இடங்களுக்கு மாறியவர்கள் ஆகும். 46.23 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்றும் 25.47 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்ததாக நீக்கப்பட்டுள்ளது.

இப்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் எதாவது பிழைகள் இருப்ப தாகக் கருதினால் பொதுமக்கள் முறையீடு செய்யலாம். அவை குறித்து விசாரித்த தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கையை எடுக்கும். இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் 6 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *