பா.ஜ.க. வென்ற இடங்களில் மீண்டும் தேர்தல் நடத்துக! உத்தவ் தாக்கரே கோரிக்கை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, ஜன. 6- மகாராட் டிரத்தில் எதிர்வரும் மாநகராட்சித் தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி போட்டியின்றி வென்ற இடங்களில் புதிதாக தோ்தல் நடத்த வேண்டும் என்று மாநில தோ்தல் ஆணையத்துக்கு சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே 4.6.2026 அன்று வலியுறுத்தினார்.

நாட்டில் மக்களாட்சியை ‘கும்பல்’ கைப்பற்றிவிட்டது போன்ற சூழல் நிலவுகிறது என்றும் அவா் குற்றஞ் சாட்டினார்.

மகாராட்டிரத் தலைநகா் மும்பை, புனே, நாகபுரி, நாசிக் உள்ளிட்ட 29 மாநகராட்சி களுக்கான தோ்தல் ஜன.15-இல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) கட்சிகள் அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணி, 68 இடங்களில் போட்டியின்றி தோ்வாகியுள்ளது.

பணபலம் மற்றும் மிரட்டலால் பிற வேட்பாளா்க ளை பின்வாங்கச் செய்து, பாஜக கூட்டணி இந்த வெற்றியை ஈட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

மாநகராட்சித் தோ்தலில் சிவசேனை (உத்தவ்)-ராஜ்தாக்கரேவின் மகாராட்டிர நவநிர்மாண் சேனை கட்சிகள் கூட்டணியாக போட்டியிடும் நிலையில், மும்பையில் 4.1.2026 அன்று நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் இருவரும் தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா்.

அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, ‘வாக்குத் திருட்டைத் தொடா்ந்து, இப்போது வேட்பாளா் திருட்டில் ஈடுபட்டுள்ளனா்.

இதன் மூலம் வாக்காளா்கள் குறிப்பாக இளைய தலை முறையினா், தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் உரிமை மறுக்கப்படுகிறது.

மாநில தோ்தல் ஆணையத் துக்கு உண்மையிலேயே துணிவிருந்தால், பாஜக கூட்டணி போட்டியின்றி வென்ற இடங்களில் தோ்தல் நடைமுறையை ரத்து செய்துவிட்டு, புதிதாக தொடங்க வேண்டும்’ என்றார்.

ராஜ் தாக்கரே பேசுகையில், ‘மும்பை உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் மராத்தியா்தான் மேயா் பதவிக்கு வர வேண்டும். ஆட்சி அதிகாரம் நிரந்தரமல்ல என்பதை உணராமல், தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது பாஜக’ என்றார்.

வாக்குறுதிகள்

மும்பை மாநகராட்சியில் தாங்கள் வெற்றி பெற்றால், வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் மீனவ சமூகத்தைச் சோ்ந்த மீன் விற்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை, வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், 700 சதுர அடி வரையிலான வீடுகளுக்கு சொத்து வரி தள்ளுபடி உள்ளிட்ட கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை உத்தவ்-ராஜ் தாக்கரே கட்சிகள் அறிவித்துள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *