பண்ருட்டியில் சுயமரியாதை நாள் விழா பிரச்சாரக் கூட்டம்!
தைத்திங்கள் முதல் நாளே தமிழருக்கு புத்தாண்டு!
பண்ருட்டி, ஜன.6 – கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், நகர திராவிடர் கழகம் சார்பில் நடை பெற்ற சுயமரியாதை நாள் விழாப் பொதுக்கூட்டத்தில், தைத் திங்கள் முதல் நாளே தமி ழருக்குப் புத்தாண்டு என்று கழகப் பொதுச்செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.
4.1.2026 அன்று மாலை 6 மணி அளவில் பண்ருட்டி நகர கழகம் சார்பில் பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் சுயமரியாதை நாள் விழா!, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! கழகப் பிரச்சார பொதுக்கூட்டம் பண்ருட்டி நகர கழக செயலாளர் கோ.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அண்ணா கிராம ஒன்றிய செயலாளர்
இ.இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றி னார். மாவட்டத் தலைவர் சொ. தண்டபாணி, மாவட்ட செயலாளர் க. எழிலேந்தி, பொதுக்குழு உறுப்பினர் கோ.புத்தன், நா.தாமோதரன், மாவட்ட துணைத்தலைவர் சி. மணிவேல், நகர தலைவர் ந. புலிக்கொடி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பேச்சாளர் புலவர் சு.இராவ ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.தர்மலிங்கம் ஆகியோர் உரைக்குப்பின், திராவிடர் மாணவர் கழக மாநில இணை செயலாளர் நாகை மு.இளமாறன் தொடக்க உரை ஆற்றினார்.
நிறைவாக கழகப் பொதுச்செய லாளர் முனைவர் துரை சந்திரசேக ரன் சிறப்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் துணைத் தலைவர் ப.சிவன், மாவட்ட மகளிர் அணி தலைவர் செ. முனியம்மாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் இரா.இராமநாதன். செ.பன்னீர்செல்வம், நா.பாவேந்தர் விரும்பி, ப.மாணிக்கவேல், தங்க.பாஸ்கர் விழுப்புரம் கவுதமன், சக்கரவர்த்தி, வழக்குரைஞர்கள் ஆ.கனகசபாபதி, ஜா.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். அண்ணா கிராம ஒன்றியத் தலைவர் இரா.கந்தசாமி நன்றி கூறினார்.
