வாசிங்டன், ஜன. 5- அமெரிக்காவின் H-1B விசா நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் தனது ஊழியர்களுக்கு அமேசான் (Amazon) நிறுவனம் தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது. விசா நேர்காணல் தள்ளிப்போனதால் அமெரிக்கா திரும்ப முடியாமல் தவிக்கும் ஊழியர்கள், இந்தியாவிலிருந்தே பணிபுரிய அந்நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் வந்துதான் வேலை செய்ய வேண்டும் என்ற கடுமையான விதியை அமேசான் சமீபத்தில் அமல்படுத்தியது. ஆனால், விசா சிக்கலால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அமெரிக்கா திரும்ப முடியாமல் இந்தியாவில் முடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, இந்த விதியில் விதிவிலக்காக ஒரு தளர்வை அமேசான் அறிவித்துள்ளது.
H-1B விசா பிரச்சினை: அமேசான் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி
Leave a Comment
