பெண்கள் பாதுகாப்பு சிங்கப்பூரும் இந்தியாவும்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிங்கப்பூர், ஜன. 5- சிங்கப்பூரில் வசிக்கும் கிருத்திகா ஜெயின், நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணி அளவில் எவ்வித பயமும் இன்றி சாலையில் நடந்து செல்வதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“யாராவது பின் தொடர்கிறார்களா என்று நான் திரும்பிப் பார்க்கக் கூடத் தேவையில்லை. ஆனால் இந்தியாவில் இதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது” என்ற அவரது கருத்து, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தக் காணொலி இந்தியச் சூழலில் பெண் களின் பாதுகாப்பு குறித்த கசப்பான உண்மைகளை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது. இந்தக் காணொலியின் கீழ் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ள கருத்துகள் முக்கியமானவை:  “பாதுகாப்பாக உணர்வது என்பது ஒரு அடிப்படை உரிமை. ஆனால், அதை ஒரு சாதனையாகக் கொண்டாட வேண்டிய நிலையில் நாம் இருப்பது வருத்தமளிக்கிறது.””ஒரு இந்தியப் பெண்ணாக, சிங்கப்பூரின் பாதுகாப் பைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தாலும், நம் நாட்டில் அத்தகைய சூழல் இல்லையே என்பது வேத னையளிக்கிறது.”

இந்தியாவில் பெண்க ளின் பாதுகாப்பு என் பது இன்றும் பெரும் சவாலாகவே உள்ளது.  பல நகரங்களில் போதிய வெளிச்சமின்மை பெண் களின் அச்சத்தை அதிகரிக்கிறது. கண் காணிப்பு வளர்ந்து வரும் நகரங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டாலும், அவற்றின் பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது. இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது.

தனியாகச் செல்லும் பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் போக்கும், கிண்டல் செய்யும் (Eve-teasing) கலாச்சாரமும் இன்னும் மாறவில்லை. பாதுகாப்பு என்பது வெறும் சட்டங்களால் மட்டும் வருவதல்ல; அது ஒவ்வொரு தனிமனிதனின் பார்வையில் இருந்தும் தொடங்க வேண்டும். இந்தியச் சாலைகளும் சிங்கப்பூரைப் போல என்றைக்கு மாறப் போகிறது என்ற கேள்வி யுடனேயே இந்தக் காணொளி விவாதம் தொடர்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *