கலிபோர்னியா, ஜன. 5- மனித மூளையையும் கணினியையும் இணைக் கும் புரட்சிகரமான நியூராலிங்க் (Neuralink) சிப் உற்பத்தியை இந்த ஆண்டில் (2026) பன்மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பயன்பாடு:
உடல் அசைவுகள் செயலிழந்தவர்கள் (Paralyzed), தங்கள் எண்ணங்கள் மூலமாகவே டிஜிட்டல் சாதனங்களைக் கட்டுப் படுத்த இந்த ‘மூளை-கணினி இடைமுகம்’ (BCI) உதவுகிறது.
தானியங்கி அறுவை சிகிச்சை:
2026-ஆம் ஆண்டில், ரோபோக்கள் மூலம் தானியங்கி முறையில் இந்த சிப்களை மனித மூளையில் பொருத்தும் பணிகளைத் தொடங்க நியூராலிங்க் திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்ப முன்னேற்றம்:
இந்த சிப்களில் பயன்படுத்தப்படும் மிக மெல்லிய ‘த்ரெட்களை’ (Threads) மீண்டும் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என மஸ்க் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு, நோலண்ட் அர்பாக் என்பவருக்கு முதன் முதலில் இந்த சிப் பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவர் கணினி, தொலைக்காட்சி மற்றும் ஏர் பியூரிபையர் போன்ற சாதனங்களைத் தனது சிந் தனை மூலமாகவே இயக்கி சாதனை படைத்தார்.
“இந்த சிப் பொருத் தப்பட்ட பிறகு, என்னால் மீண்டும் டிஜிட்டல் உலகோடு இணைய முடிகிறது” என நோலண்ட் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.
கடந்த நவம்பர் மாத நிலவரப்படி, இதுவரை 12 பேருக்கு வெற்றிகரமாக இந்த சிப் பொருத்தப்பட்டுள்ளது. குரங்குகளிடம் நடத்தப் பட்ட ஆரம்பக்கட்ட சோதனைகளுக்குப் பிறகு, தற்போது மனிதர்க ளுக்கான பயன் பாட் டில் நியூராலிங்க் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தானியங்கி அறுவை சிகிச்சை முறைகள் மூலம், நரம்பியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான மக்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க நியூ ராலிங்க் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
