சென்னை, ஜன.5 “திமுகவை தவிர எந்தக் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடத்தவில்லைl ஆட்சி அதிகாரத்தில் பங்கும் கேட்கவில்லை!” என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
தி.மு.க.வுடன் மட்டுமே கூட்டணி!
சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று (4.1.2026) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “தவெக உடன் காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்துவதாக வரும் தகவல் வதந்தி. திமுகவுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
விரைவில்
இறுதி செய்வோம்
தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முன்கூட்டியே தொடங்கி சுமுக மாக நடைபெற்று வருகிறது. தி.மு.க. வுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை விரைவில் இறுதி செய்வோம்.
திமுகவிடம் காங்கிரஸ் 38 தொகுதிகள் கேட்டதாக கூறியது யார்? திமுக கூட்டணியில் காங்கி ரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிப்போம்.
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி நம்பகத்தன்மை வாய்ந்தது. எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை விரும்பும். நாடா ளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறிய புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்போம்.
5 ஆயிரம்
விருப்ப மனுக்கள்
சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் 5 ஆயிரம் விருப்ப மனுக்களை வாங்கியுள்ளோம். ம.தி.மு.க. நடத்திய நடைீ்பயண தொடக்க விழாவில் கலந்து கொள்ளாதது எங்கள் கட்சியின் முடிவு. அதுபற்றி கருத்து தெரி விக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
