சிங்கப்பூர், ஜன. 3- சிங்கப்பூரின் சேனல் நியூஸ் ஆசியா வெளியிட்ட செய்தியில், “சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வரும் 8ஆம் தேதி ஒன்பது பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்காக அதிபர் தர்மன் சண்முகரத்தினம் பரிந்துரைத்த பெயர்களில், நேஷனல் யுனிவர்சிட்டி பாலிகிளினிக்குகளின் குடும்பநல மருத்துவர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு மற்றும் பொது ஊழியர்களின் ஒருங்கிணைந்த சங்கத்தின் பொதுசெயலாளர் சஞ்சீவ் குமார் திவாரி ஆகிய இந்திய வம்சாவளியினர் முன்மொழியப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த மாதம் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் பதவி ஏற்று கொள்வார்கள். இவர்களின் பணி, சமூகத்துக்கான அவர்களுடைய பங்களிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளது.
