சென்னை திருவொற்றியூர் தண்ணீர் ஓடை குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த குருசாமி சந்திரன் ஆகியோரது தலைமையில் 24 அய்யப்ப பக்தர்கள் கடந்த 28ஆம் தேதி சபரிமலைக்கு வாகனத்தில் சென்றனர். அய்யப்பன் கோயில் தரிசனம் முடிந்து திரும்புகையில் திருச்செந்தூர் அருகில் வாகனம் தறி கெட்டு மின் கம்பத்தில் மோதி கடைசியில் வாய்க்காலில் விழுந்தது. வாகனத்தை ஓட்டியவரின் பெயரும் முருகன்தான்!
இதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அய்யப்பனை நம்பி சென்றோர் கைவிடப்பட்டது பற்றி பக்தர்கள் சிந்திப்பார்களா?
எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்கள் பலி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்மீது அய்யப்ப பக்தர்களை ஏற்றி வந்த வாகனம் மோதி இரண்டு பக்தர்கள் பரிதாபமாக அந்த இடத்திலேயே பலியானார்கள்.
அய்யப்பன் சக்தி – கருணை இது தானோ!
