மும்பையில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுக்காக மும்பை வந்திறங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை”த் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த செய்தியை அறிந்ததும், பெரு மகிழ்ச்சியுடன் உடனடியாகத் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தார்.
முதலமைச்சர் அவர்கள், 23 ஆண்டுகளுக்கு முன்பு அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட உரிமை களை, தாங்கள் தேர்தலில் வழங்கிய வாக்குறுதியின்படியே நிறைவேற்றிவிட்டதைத் தெரிவித்து, தமிழர் தலைவரின் வாழ்த்துகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
