இவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சிறீசாரதா பீட ஜகத்குரு சிறீ விதுசேகர பாரதீ சுவாமிகள், கடந்த 27ஆம் தேதி குர்கானில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிருங்கேரி சிறீ சாரதா பீடத்தின் கிளை திருமட வளாகத்தில் உள்ள மகா கணபதி, சிவலிங்கம், சந்திரமவுலீஸ்வரர், சாரதாம்பாள், ஆதி சங்கரர், வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய சன்னிதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்வித்தார்.

பக்தர்கள் மத்தியில்,
ஜகத்குரு ஆற்றிய அருளுரை:

அனுஷ்டானம், ஒருவர் தினமும் செய்ய வேண்டிய ஆன்மிக நெறிமுறை; அது ஆன்மிக சாதனையின் அடிப்படை. அது என்ன வகை அனுஷ்டானம் எனில், துவக்கத்தில் மனதை துாய்மைப்படுத்தும் சக்தி கொண்ட இறைவனின் புகழ்பெற்ற நாமங்களை உச்சரிப்பதாகும். இது வெறும் நாமம் உச்சரிப்பதைப் போலத் தோன்றலாம். ஆனால், ஒருவரை ஜப யாகத்தின் உச்ச நிலைக்கு இட்டுச் செல்லும்.

அறிவை பலப்படுத்துகிறது. இறைவனின் நாமத்தை உச்சரிக்கும் இந்த அனுஷ்டானத்தை ஒரு ரூபத்தின் மீது கவனம் செலுத்தி செய்ய வேண்டும்.

பவுதிக நாமங்களையும் வடிவங்களையும் விடுத்து, தெய்வீக நாமம் மற்றும் தெய்வீக ரூபம் கவனச்சிதறல் உள்ள மனதை ஒருமுகப்படுத்துகிறது. அனுஷ்டானப் பயிற்சிக்கு பின், அத்யயனம் எனப்படும், சாஸ்த்ர தெய்வீக நுால்களைப் படித்தல் முறை பின்பற்றப்பட வேண்டும்.

ஏனெனில், தெய்வீக நாமம் மற்றும் ரூபம் ஒருமுகப்பட்ட மனதுக்கு வழிவகுக்கும்போது, சாஸ்திர நுால்களைப் படித்தல் அறிவை பலப்படுத்துகிறது. ஸநாதன தர்மத்தின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள பகவத் கீதையைப் படிக்க வேண்டும். ஆன்மிக ரீதியில் பயிற்சி பெற்ற அறிவானது விவேகத்தின் சக்தியைப் பயன்படுத்தி மனதைக் கட்டுப்படுத்தும் திறனை பெறுகிறது.

அதன் பயனாக, ஒரு துாய்மையான மற்றும் ஒருமுகப்பட்ட மனம் புலன்களை கட்டுப்படுத்தும் திறனைப் பெறுகிறது.

பல்வேறு வடிவங்களைப் பார்க்கும் கண்கள், பல்வேறு ஒலிகளைக் கேட்கும் காதுகள், இனிமையான வாசனையை நுகரும் மூக்கு, சிறந்த உணவைச் சுவைக்கும் நாக்கு மற்றும் மனிதத் தொடர்பை உணரும் தோல் ஆகியவையே மனதை வெளிப்புறமாக அலைபாய அனுமதிக்கும் இந்தப் புலன்கள்.

மனம் வெறுமனே அலைந்து திரிந்து, உள்நோக்கித் திரும்ப மறுக்கிறது. ஆனால், சாதனை என்பது இந்த முழு செயல்முறையையும் தலைகீழாக மாற்றக்கூடிய மார்க்கம் ஆகும்.

இவரின் மறுபக்கம் என்ன?

The Panchama is asked to be at a distance because of the inborn impurity of his body.  Any amount of washing of the body with the best available soap and any clothing and decoration of it in the best upto date style, can not remove from it its inlaid filth that  has originated from the deep rooted contamination of the filthy  inheredity.

The Hindu Ideal- sringeri shankaracharya,  P.230

தமிழாக்கம்:

“பஞ்சமர்கள் பிறப்பிலேயே அசுத்தமான உடலைக் கொண்டிருப்பதால், அவர்கள் தள்ளி நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உலகிலேயே மிக உயர்ந்த, மிகச்சிறந்த சோப்பைக் கொண்டு உடலைக் குளிப்பாட்டினாலும், மிகச்சிறந்த நவீன ஆடைகள் மற்றும் அணிமணிகளாலும் அலங்கரித்துக் கொண்டாலும், அவர்கள் உடலுக்குள் ஊடுருவியிருக்கும் அந்த அழுக்கை நீக்கிவிட முடியாது. அந்த அழுக்கானது பரம்பரை பரம்பரையாக ஆழமாக வேரூன்றிப் போன அசுத்தத்திலிருந்து உருவானதாகும்.”

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *