கார்கோன், ஜன. 03- மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள பத்வா பகுதியில் நர்மதா நதிக் கரையின் மேம்பாலத்தில் 200 கிளிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
பறவைக் காய்ச்சல் பாதிப்பால் கிளிகள் இறக்கவில்லை என்பது பறவைகளின் உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கிளிகளின் உடற்கூராய்வை மேற்கொண்ட டாக்டர் மனிஷா சவுகான் கூறுகையில், “கிளிகளின் உடலில் அரிசி மற்றும் கூழாங்கற்கள் இருந்தன. உணவில் ஏற்பட்ட விஷத்தன்மையே இறப்புக்கு காரணம். ”மருந்து தெளிக்கப்பட்ட வயல்களில் பயிர்களை மேய்ந்ததாலும், நர்மதா நதி நீரை குடித்ததாலும் கிளிகள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது,” என்றார்.
அதுபோல, புத்தாண்டு அன்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மனிதக்கழிவு கலந்த நீரைக்குடித்ததால் வாந்திபேதி ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
