ஏழைகள் பலியாகும் போதெல்லாம் பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன.3 இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்று பாராட்டப்பட்ட மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகரில் குடிக்கும் குடிநீரே பொதுமக்களுக்கு விஷமாக மாறி உள்ளது. இந்தூர் பாகீரத்புராவில் குடிநீர் நஞ்சான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக இந்தூர் மேயர் புஷ்யமித்ரா பார்கவா கூறியிருந்தார். ஊடகங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் தகவலின் படி, 14 பேர் உயிரிழந்திருப்பார்கள் என தெரிகிறது. சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரி களில் 26-இல் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தசம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தையே உலுக்கி உளளது. அலட்சியம் தொடர்பான புகார் கார ணமாக ஒரு பொறியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .இந்தூரில் இரண்டு உயர் அதி காரிகள் பணியிடை நீக்கம் செய் யப்பட்டுள்ளனர். உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் ஒரு பொதுக் கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டதில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துள்ளது. இந்த தண்ணீரை குடித்த பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு நடைபெற்ற இந்தச் சம்பவம் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியது.

இது குறித்து மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் (யாதவ்) கூறும்போது, இந்தப் பிரச்சினையில் இரண்டு, மூன்று நாட்களில் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40,000-க்கு மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்றார். இதற்கிடையில், பாகீரத் புராவில் குடிநீர் குழாயில் ஏற் பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், ஒவ்வொரு முறையும் ஏழை மக்கள் இறக்கும்போது பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

இந்தூரில் குடிநீருக்கு மாறாக விஷமே விநியோகிக்கப்பட்டது. அதே சமயம் நிர்வாகம் ‘கும்பகர்ணனைப் போல’ உறங்கிக் கொண்டிருக்கிறது.வீடுதோறும் துயரம் பரவியுள்ளது. ஏழைகள் நிர்க்கதியாக நிற்கின்றனர். இதற்கு எல்லாம் மேலாக பாஜக தலைவர்களிடம் இருந்து ஆணவமாக அறிக்கைகள் வருகின்றன.

அசுத்தமான துர்நற்றம் வீசும் தண்ணீரைப் பற்றி மீண்டும் மீண்டும் மக்கள் புகார் அளித்தனர். இருந்தும் ஏன் அரசு செவிசாய்க்கவில்லை. குடி நீரில் கழிவுநீர் கலந்தது எப்படி?சரியான நேரத்தில் நீர் விநியோகம் ஏன் நிறுத்தப்படவில்லை? பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்திற்கும் யார் பொறுப்பு ஏற்பார்கள். சுத்தமான நீர் என்பது சலுகை அல்ல. அது வாழ்வதற்கான உரிமை. இந்த உரிமை கொலை செய்யப் பட்டதற்கு பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசும், அதன் அலட்சியமான நிர்வகம் மற்றும் அதன் இரக்கமற்ற தலைமை ஆகியவையே பொறுப்பு.

மத்திய பிரதேச மாநிலம் தற்போது மோசமான ஆட்சியின் மய்யமாக மாறியுள்ளது. ஓரிடத்தில் இருமல் மருந்து குடித்து ஏற்படும் மரணங்கள்.மற்றொரு இடத்தில் அரசு மருத்துவமனைகளில் எலி களால் குழந்தைகளின் உயிர்கள் பறிக்கப்படுவது. இப்போது கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்து ஏற்படும மரணங்கள். ஒவ்வொரு முறையும் ஏழை மக்கள் இறக்கும் போது பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்.இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *