இந்தியாவின் ஹிந்தி மொழி பேசும் வட மாநிலங்கள் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றுக்கு இடையேயான வளர்ச்சியில் குறிப்பாக 2025-2026 காலக்கட்டத்தில் தமிழ்நாடு எட்டிய இலக்கு மிக அபாரம்!
பொருளாதார வளர்ச்சி மற்றும்
தனிநபர் வருமானம்
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஹிந்தி பெல்ட் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஜிடிபி (GDP) பங்களிப்பு
தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2025-2026 நிதியாண்டில் சுமார் ரூ.35.7 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்தியாவிலேயே முதலாவது பொருளாதாரத்தைத் தொடும் புள்ளியாகும். அதேசமயம், தமிழ்நாட்டை விட சுமார் மூன்று மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தின் ஜிடிபி சுமார் ரூ.29.8 லட்சம் கோடி மட்டுமே.
தனிநபர் வருமானம்
தமிழ்நாட்டின் தனிநபர் சராசரி உற்பத்தி மதிப்பு சுமார் ரூ.3.53 லட்சம் ஆகும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் இது சுமார் ரூ.1.07 லட்சம் மட்டுமே. அதாவது, ஒரு தமிழரின் சராசரி வருமானம் ஒரு வட இந்தியரின் வருமானத்தை விட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம்.
பொருளாதாரத் தற்சார்பு
தமிழ்நாடு தனது வருவாயில் 75 சதவீதத்தை மாநில அளவிலேயே ஈட்டுகிறது. இதே போன்று ஹிந்தி மாநிலங்கள் மாறவேண்டுமானால் இன்னும் 15 ஆண்டுகள் தேவை. ஆகையால்தான் மோடி “2047 வளர்ந்த இந்தியா” என்று ‘சோப்புக்குமிழி’ வெற்று அறிக்கை விட்டு வட இந்தியர்களை வாய்பிளக்க வைக்கிறார். ஆனால், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் 60 சதவீதத்திற்கும் மேலான வருவாய்க்கு ஒன்றிய அரசின் வரிப் பங்கையே நம்பியுள்ளன.
கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு
கல்வித் துறையில் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாகத் திகழ்கிறது.
உயர்கல்விச் சேர்க்கை (GER): இந்தியாவில் உயர்கல்விக்குச் செல்பவர்களின் விகிதம் தமிழ்நாட்டில் தான் அதிகம் (சுமார் 57 சதவீதம்). இதுவும் 2019ஆம் ஆண்டு புள்ளிவிவரம். 2021ஆம் ஆண்டிற்குப் பிறகு குறிப்பாக திமுக ஆட்சி வந்த பிறகு பிறப்பிக்கப்பட்ட பல்வேறும் திட்டங்களால் உயர்கல்வி சேரும் விகிதம் 75 விழுக்காட்டைத் தாண்டி இருக்கும்
ஹிந்தி பெல்ட் மாநிலங்களான பீகார் (15-16 சதவீதம்) மற்றும் உத்தரப் பிரதேசம் (17-18 சதவீதம்).
கல்வி நிறுவனங்களின் தரம்: இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பல கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், ஹிந்தி பெல்ட் மாநிலங்களில் உள்ள சில முன்னணி நிறுவனங்களைத் தவிர, பெரும்பாலான கல்வி நிலையங்கள் அடிப்படைத் தரத்தில் பின்தங்கியுள்ளன.
திட்டங்கள்: ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘காலை உணவுத் திட்டம்’ போன்ற தமிழ்நாட்டின் திட்டங்கள் மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்து கல்வியை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன.
சுகாதாரக் கட்டமைப்பு
சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு உலகத் தரம் வாய்ந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) மற்றும் மாவட்ட மருத்துவமனைகள், ஏழை எளிய மக்களுக்கான தரமான சிகிச்சையை உறுதி செய்கின்றன. மாறாக, வட மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்பு இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது.
தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு
தொழில்மயமாக்கல்: தமிழ்நாடு ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படுகிறது. வாகன உற்பத்தி, மின்னணு சாதனங்கள் (Electronics) மற்றும் ஜவுளித் துறையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. 2025இல் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
நகரமயமாக்கல்: தமிழ்நாடு சுமார் 48 சதவீதம் நகரமயமாக்கப்பட்ட மாநிலம். இது ஹிந்தி பெல்ட் மாநிலங்களை விட மிக அதிகம். நகரமயமாக்கல் காரணமாக வேலைவாய்ப்புகளும் உட்கட்டமைப்புகளும் இங்கு அதிகம்.
அடிப்படைத் தேவைகள்: குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகளில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. குறிப்பாக ‘அனைவருக்கும் வீடு’ மற்றும் ‘மக்களுடன் முதல்வர்’ போன்ற திட்டங்கள் மூலம் அடிமட்டத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
தொழில் வளர்ச்சியில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தைவான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு இணையாகச் சாதனையை நோக்கித் தமிழ்நாடு சென்றுகொண்டு இருக்கிறது.
மின்னணு சாதனங்கள் உற்பத்தி (Electronics Manufacturing)
தற்போது இந்தியாவின் ‘மின்னணு ஏற்றுமதி மய்யம்’ (Electronics Export Hub) என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
ஏற்றுமதி மதிப்பு: 2024-2025 நிதியாண்டில் மட்டும் தமிழ்நாடு சுமார் $9.5 பில்லியன் மதிப்பிலான மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்தியாவிலேயே முதலிடமாகும்.
முக்கிய நிறுவனங்கள்: ஆப்பிள் நிறுவனத்தின் அய்போன் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் (Foxconn), பெகட்ரான் (Pegatron) மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை கிருஷ்ணகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் முதலீடு செய்துள்ளன.
வேலைவாய்ப்பு: இத்துறை குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை (சுமார் 70 சதவீதம்) வழங்குகிறது.
வாகன உற்பத்தியில் ஜெர்மனிக்கு இணையான வளர்ச்சியை தமிழ்நாடு பெரும் எல்லையை தொட உள்ளது.

தமிழ்நாடு தனது மாநில வருவாயில் 70-75 விழுக்காட்டை தானே ஈட்டும் திறனைப் பெற்றுள்ளது. இது இந்தியாவிலேயே உயர்ந்த அளவு. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் 45-55 விழுக்காட்டுக்கும் கீழே உள்ளது. தமிழ்நாடு தனது சொந்த வரி வருவாயை (Own Tax Revenue) மொத்த வருவாயில் 75 விழுக்காட்டுக்கு மேல் பெறுகிறது, இது மற்ற மாநிலங்களை விட மிக உயர்ந்தது!.
‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படும் சென்னை, வாகன உற்பத்தியில் உலகளாவிய மய்யமாகத் திகழ்கிறது.
வாகன உற்பத்தி: இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன உற்பத்தியில் தமிழ்நாடு 35 சதவீதம் – 40 சதவீதம் பங்களிக்கிறது.
மின்சார வாகனங்கள் (EV): இந்தியாவின் 40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்றன. ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), ஏதர் (Ather) மற்றும் டிவிஎஸ் (TVS) போன்ற நிறுவனங்கள் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியை ‘மின்சார வாகனப் பள்ளத்தாக்காக’ (EV Valley) மாற்றியுள்ளன.
புதிய முதலீடு: அண்மையில் வியட்நாமின் ‘வின்ஃபாஸ்ட்’ (VinFast) நிறுவனம் தூத்துக்குடியில் சுமார் ரூ.16,000 கோடி மதிப்பிலான தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது.

ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள்
பின்னலாடை மற்றும் கைத்தறித் துறையில் தமிழ்நாடு பாரம்பரியமாகவே வலுவான நிலையில் உள்ளது.
திருப்பூர் பங்களிப்பு: இந்தியாவின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் 50 சதவீதம் திருப்பூரிலிருந்து மட்டுமே கிடைக்கிறது.
தொழில்நுட்ப ஜவுளி மருத்துவ மற்றும் ராணுவத் தேவைக்கான சிறப்பு ஆடைகள் உற்பத்தியில் தமிழ்நாடு தற்போது கவனம் செலுத்தி வருகிறது.
விருதுநகரில் அமைக்கப்பட்டு வரும் மாபெரும் ஜவுளிப் பூங்கா இத்துறையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோல் பொருட்கள் மற்றும் காலணிகள்
இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சிம்ம சொப்பனமாக உள்ளது.
பங்கு: இந்தியாவின் மொத்த தோல் பொருட்கள் உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் மற்றும் ஏற்றுமதியில் 45 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது.
காலணி உற்பத்தி: தைவான் நாட்டின் முன்னணி காலணி நிறுவனங்களான பவுசென் (Pou Chen) மற்றும் ஹோங் ஃபூ (Hong Fu) ஆகியவை கள்ளக்குறிச்சி மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் பெரும் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.
தகவல் தொழில்நுட்பம் (IT & SaaS)
சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மய்யங்களாக வளர்ந்துள்ளன.
சாஸ் ‘SaaS Capital’ (Software as a Service) தலைநகரம்: சென்னை இந்தியாவின் ‘SaaS Capital’ (Software as a Service) என்று அழைக்கப்படுகிறது ஃபிரெஷ்ஒர்க்ஸ் (Freshworks) உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்கள் இங்கிருந்துதான் உருவெடுத்தன.
ஏற்றுமதி: தமிழ்நாட்டின் அய்டி ஏற்றுமதி ஆண்டுக்கு 15 சதவீதம் – 20 சதவீதம் வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
காற்று வீச்சு மற்றும் சூரிய ஒளி: இந்தியாவின் மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் தமிழ்நாட்டிலேயே உள்ளது.
இலக்கு: 2030-க்குள் 50% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெற தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் இந்த தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், இங்குள்ள பொருளாதார மண்டலங்கள் (SEZ) மற்றும் தடையற்ற மின்சாரம் ஆகும். வட மாநிலங்கள் சிலவற்றில் கனிம வளங்கள் அதிகம் இருந்தாலும், அவற்றை மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களாக மாற்றுவதில் தமிழ்நாடு காட்டும் வேகம் அந்த மாநிலங்களில் இன்னும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பசுமை ஆற்றலில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகும்.
