பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்தில் 2025ஆம் ஆண்டு 48 குற்றவாளிகள் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொலை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லக்னோ, ஜன.2 உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற 2017-ஆம் ஆண்டிலிருந்து, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் மிக அதிகமான குற்ற வாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.

என்கவுண்டரில் சுட்டுக்கொலை

அம்மாநில காவல்துறை வெளி யிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, இந்த ஆண்டில் மட்டும் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தர பிரதேச டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா, 2017 மார்ச் முதல் 2025 டிசம்பர் 29 வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் கிளீன்’ நடவடிக்கைகளின் முழு விவரங்களை வழங்கினார். அதன்படி, நடப்பு 2025-ஆம் ஆண்டில் மட்டும் 2,739 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 48 குற்றவாளிகள் கொல்லப்பட்டதோடு, 3,153 பேர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக 2018-இல் 41 பேர் கொல்லப்பட்டதே ஒரு ஆண்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 25-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த எட்டு ஆண்டுகால யோகி ஆதித்யநாத் ஆட்சியில் இதுவரை மொத்தம் 266 குற்ற வாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், குற்றவாளிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் இதுவரை 18 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 1,600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் இத்தகைய கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுன்டர்கள் மட்டுமன்றி, சட்டவிரோத மதமாற்றம் மற்றும் பசு கடத்தலுக்கு எதிராகவும் காவல்துறை தீவிரமாகச் செயல்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் 475 சட்டவிரோத மதமாற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 855 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 1,197 பசு கடத்தல் வழக்குகள் பதியப்பட்டு 3,128 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

7.38 கோடி சொத்துக்கள் முடக்கம்

மேலும், கேங்ஸ்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்குச் சொந்தமான சுமார் 7.38 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இந்த ஆண்டில் முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமரசம் இல்லை என்று கூறிய காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா, குற்றவாளிகள் தப்பிக்க முயலும்போது அல்லது காவல்துறையினரைத் தாக்கும்போது மட்டுமே தற்காப் புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தப் படுவதாக விளக்கமளித்தார். உ.பி. அரசின் இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *