சென்னை, ஜன.2- தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தலைச் சந்திக்க தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மண்டலந்தோறும் மாநாடு நடத்த வேண்டுமென தி.மு.க. இளைஞ ரணிச் செயலாளரும், துணை முதல மைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்தார்.
முதல்கட்டமாக வடக்கு மண்டல மாநாடு திருவண்ணாமலையில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நடத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் 1.3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அடுத்தகட்டமாக இளைஞரணி யின் தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை இளைஞரணி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாநாட்டிலும் பங்கேற்க 1.5 லட்சம் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
