டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ‘சி’, ‘டி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: ரூ.183.86 கோடி ஒதுக்கீடு. 9.90 லட்சம் பேர் பயனடைவார்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இசுலாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயர் ஆனார் என்ற வரலாறு படைத்த ஜோரான் மம்தானி, நேற்று (1.1.2026) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி மன்ஹாட்டன் நகரின் கைவிடப்பட்ட ஒரு ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதை முன்னர் நடைபெற்றது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* புத்தாண்டு 2026இல் தமிழ் நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்கள்; மாநில கட்சிகளுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது என்கிறது தலையங்கம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘வரைபடத்தில் இடம்பெறாத’ வாக்காளர்கள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. கவலை தெரிவிப்பு: வாக்குச்சாவடி வாரி யான பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளுமாறு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
தி இந்து:
* அரசியலமைப்புச் சட்ட மதிப்புகளை நிலைநிறுத்த குடிமக்கள் கூட்டாகப் பணியாற்ற வேண்டும் – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புத்தாண்டு செய்தி
தி டெலிகிராப்:
* பா.ஜ.க அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா ஒரு பத்திரிகையாளரை கடுமையாக திட்டிய காட்சிப்ப பதிவை நீக்கியதற்காக அந்தச் செய்தி சேனலை அபிஷேக் கடுமையாகச் சாடியுள்ளார். அந்த ஊடகம் பத்திரிகை சுதந்திரத்தை விட மவுனத்தையே தேர்ந்தெடுத்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் குற்றச்சாட்டியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஒரு ’மராத்தியர்’ மும்பை மேயராகி விடக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்: என்று சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு. இது மராத்தி மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு சதி என்றும் அவர் கூறினார்
* எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 40% ஆசிரியர் பணியிடங்கள் காலி: ஆர்டிஅய்: 11 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 10இல் நான்கு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 11 எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் கிட்டத்தட்ட 40% காலியாக உள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா அணுகிய ஆர்டிஅய் பதில்கள், 4,099 ஆசிரியர் பணியிடங்களில் 1,600 – அதாவது சுமார் 39% – காலியாக உள்ளன என்பதைக் காட்டுகின்றன. இது நோயாளி பராமரிப்பு, சிறப்பு சேவைகள் மற்றும் மருத்துவக் கல்வி ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம் குறித்து கவலைகளை எழுப்புகிறது.
– குடந்தை கருணா
