ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி!
காரைக்குடி, ஜன.2- ‘‘வளர்ச்சியில் நாட்டி லேயே தமிழ்நாடுமுதலிடம் பெறுகிறது’’ என்றும், ‘‘உத்தரப்பிரதேசத்தோடு ஒப்பி டுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது’’ என்றும் ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் வாக்கா ளர் பட்டியல் திருத்தத்தின்படி இறந்த வர்கள்என 24 லட்சம் பேரை நீக்கி உள்ளனர். இரட்டைப்பதிவு என 3.5 லட்சம் பேரை நீக்கியுள்ளனர். வாக்கா ளர் பட்டியலில் கொல்கத்தா, பீகார் மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் ‘முகவரி இல்லாதவர்கள்’ என்ற பகுதியைச் சேர்த்துள்ளனர். அதன்படி66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் உள்ளனர். இதில், ஒரு சிலர் போலியாக இருக்கலாம். அவர்களை நீக்குங்கள். தங்களை நீக்கியது தவறு என்று 7.5 லட்சம் பேர் மனு கொடுத்திருக்கின்றனர். இவை 10 லட்சத்தைத் தாண்டும்.
அப்படி என்றால் முகவரி இல்லா தோர் 66 லட்சம் பேர் என்பதும் தவ றாகிறது.பொதுமக்களும், கூட்டணிக் கட்சியினரும் விழிப்போடு செயல்பட்டு தேர்தல் ஆணையத்தின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்.
எங்கள் கூட்டணி வெல்லும்!
நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். 5 பேரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் தலைமை நியமித்து இருக்கிறது. இந்த 5 பேரும் முதல் அமைச்சரையும், மற்ற தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளனர். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக தேர்தலை சந்திக்கும். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி வெல்லும் என்பது என் முழு நம்பிக்கை. த.வெ.க. தலைவர் விஜய் முயற்சி வெல்லாது.
காந்தியார் பெயரை நீக்கியது கண்டனத்துக்குரியது!
தொகுதி பங்கீடுகுறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடி வெடுப்பார்கள். மற்றவர்கள் கருத்து சொல்லலாம். ஆனால், முடிவு தலை வர்கள் 2 பேருக்கு இடையேதான். திட்ட ஆணையத்தின் தற்போதைய நிதி ஆயோக் அறிக்கையில் இந்திய மாநிலங்களிலேயே வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பது தெளி வாக உள்ளது. அதனால் உத்தரப்பிர தேசத்தோடு ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியார் பெயரை நீக்கியது கண்டனத்துக்குரியது.
இதனை ஏற்க முடியாது!
இதற்கான திட்டச்செலவுகளில் 60 சதவீதம் ஒன்றிய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் கொடுக்க வேண்டும். நிதிச்சுமை உள்ள மாநிலங்களினால் இதனை ஏற்க முடியாது. 100 நாட்களுக்கே வேலை கொடுக்க முடியாத நிலையில் 125 நாட்களுக்கு வேலை என்பது சாத்தியமா என தெரியவில்லை.
பல மத்திய பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை ஒன்றிய அரசுதானே நியமிக்கிறது? மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசு ஏன் துணைவேந்தரை நியமிக்கக்கூடாது?
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ககன் தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுஅறிக்கையும் கொடுத்துள்ளது.
அதன் அடிப்படையில் அரசு தீர்மானிக்கும். திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு பழக்கவழக்கத்தையாரும் மாற்ற முயற்சிக்கக்கூடாது. அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி ஏற்படுமா? என்ப தெல்லாம் 2 கட்சித்தலைவர்களும் முடிவெடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உடனி ருந்தார்.
