திருவனந்தபுரம், ஜன.2 கேரள மாநில தலைநகர் திருவனந்த புரத்தில் சாலையில் உள்ள காந்தி சிலை மீது ஒருவர் ஏறி அமர்ந்து அந்தச் சிலையை அவமதிக்கும் வகையில் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அந்தக் காட்சி பரவி வருகிறது.
சசிதருர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருவனந்தபுரத்தில் பெரும்பாலான காங்கிரஸ் உள்ளூர் தலைவர்கள் தயவில், அங்கு பா.ஜ.க. முதல் முதலாக தலைநகர் மாநகராட்சியைக் கைப்பற்றியது.
முதல் நாளே சில எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் வீடுகளை பா.ஜ.க. தொண்டர்கள் சேதப்படுத்திய காட்சி வெளியானது.
இந்த நிலையில் பா.ஜ.க. சார்பில் 29.12.2025 அன்று வி.வி.ராஜேஷ் என்பவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெரும்பான்மைக்கு 2 உறுப்பினர்கள் தேவை என்ற போது, காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை உறுப்பினர்கள் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், பாஜக மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
மேயர் பதவி ஏற்ற மறுநாளே அங்கு காந்தியார் சிலை அவமதிப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ஜே.பி. வெற்றி பெற்றால் வெறிதான் வினையாகும்!
